
இம்மாதம் 19 ம் திகதி கொரியாவில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆசிய கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரில் இவர் இலங்கை அணிக்காக விளையாடவுள்ளார்.
இவர் புத்தளம் போல்ஸ் வீதியில் வதியும் புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக்கின் உப தலைவரும், புத்தளம் நியூ ஸ்டார்ஸ் கழகத்தின் தலைவருமான எம்.ஐ. ஹலீம்தீன் மற்றும் ஐனுல் பர்ஹானா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வர் ஆவார்.
புத்தளம் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்கள், புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக்கின் நிர்வாகிகள் மற்றும் புத்தளம் நகர கால்ப்பந்தாட்ட கழக வீரர்கள் யாவரும் இந்த மாணவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
நன்றி : Puttalam online