நாட்டில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கம் உதவி வழங்க முன்வந்துள்ளது.
இதன்படி, அந்த நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பணிப்புரைக்கு அமைய இன்று உதவிப் பொருட்கள் சில இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இவற்றில் 100 கூடாரங்கள், தண்ணீர் போத்தல்கள் 200, நடமாடும் வைத்தியசாலைகள் 5 உள்ளிட்ட பொருட்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, ஜப்பான் மற்றும் இந்தியாவில் இருந்து நேற்று கொண்டுவரப்பட்ட உதவிப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.