Saturday, August 27, 2016

காட்டு யானைத்தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் பலி: 10 பேர் காயம்

புத்தளம்-அநுராதபுரம் பகுதியில் பயணித்த வானொன்றை காட்டு யானை தாக்கியதில், அதில் பயணித்த நபரொருவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மீயாகொட பாலத்திக்கருகிலேயே இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தைச்  சேர்ந்த வேலாயுதம் தர்மராஜ் என்ற 39 வயதுடைய நபரே சம்பவத்தின் போது உயிரிழந்ததாகவும் காயமடைந்த அனைவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .
Disqus Comments