இம்முறை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
பரீட்சை எதிர்வரும் 21ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், மாணவர்கள் நேர காலத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு சமூகம் அளிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் தமது பரீட்சை சுட்டெண்ணை சீருடையின் இடது பக்கத்தில் குறித்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
பெற்றோர் மாணவர்களை உரிய நேரத்தில் பரீட்சை மண்டபத்திற்கு அழைத்து வருவதுடன், பரீட்சை நடைபெறும் நிலையங்களுக்குள் உள்நுழைவதற்கு பெற்றோருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது எனவும் பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.
அனமதியின்றி எவரும் பரீட்சை நடைபெறும் நிலையங்களுக்குள் பிரவேசிப்பதற்கு தடை என்பதுடன், பரீட்சைகளுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களை கைதுசெய்யும் படி பரீட்சைகள் திணைக்களம் பொலிஸ் தலைமையகத்துக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.
இம்முறை நாடளாவிய ரீதியில் 2959 மத்திய நிலையங்களில் பரீட்சை இடம்பெறுகின்றது.
350,701 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதோடு, இதில் 421 மாணவர்கள் விசேட தேவையுடையவர்கள் என்றும் பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.