தனது நாட்டில் இருந்து செல்லும் பயணிகள் ஹமாட் சர்வதேச விமான நிலையத்தை உபயோகிக்கும் போது 35 கட்டார் ரியால்களை வரியாக செலுத்த வேண்டுமென கட்டார் அறிவித்துள்ளது.
‘இதுபோன்ற வரி பல்வேறு நாடுகளில் அமுலில் இருக்கும் போதும் கட்டார் தற்போதே அந்த வரியை அறிமுகம் செய்யவுள்ளது.
இது தொடர்பான சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஓகஸ்ட் 30 இன் பின் விநியோகிக்கப்படும் அனைத்து பயணச் சீட்டுக்கள் மற்றும் டிசம்பர் முதலாம் திகதி முதலான பயணங்களுக்கு இது செல்லுபடியாகுமென தெரிவிக்கப்படுகின்றது.
எண்ணெய் விலை குறைவடைந்து வருகின்றமையால், வேறு வருமான வழிகளை அறிமுகம் செய்வதில் ஓர் அங்கமாகவே இது பார்க்கப்படுகின்றது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமைந்துள்ள பல விமானநிலையங்கள் இவ்வருட ஆரம்பத்தில் இதே போன்ற வரிகளை இவ்வருட ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிட த்தக்கது.