கைத்தொழில் வலயம் ஒன்றை உருவாக்குவதற்காக ஹம்பாந்தோட்டையில் 15,000 ஏக்கர் நிலப்பரப்பு சீன முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன் தற்போது நடைமுறையில் உள்ள ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும் குறைந்த வரி கொள்கையை மாற்றி புதிய சட்டமூலம் ஒன்றை தாக்கல் செய்து முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.