நட்டத்தில் இருக்கும் வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்யும் முயற்சியாக, நூற்றுக்கணக்கான பணியிடங்களை நீக்கப்போவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
சான் ஃபிரான்ஸிஸ்கோவில் இருந்து இயங்கும் ட்விட்டர் நிறுவனம், அதன் பணியிடங்களை 9 சதவீத அளவில் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
இதனால் சுமார் 350 பேர் வரையில் வேலை இழப்பார்கள் என தெரிகிறது.
பிற சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்நாப்ச்சாட் போன்றவற்றுடன் போட்டியிட முடியாமல் ட்விட்டர் நிறுவனம் திணறி வருகிறது.
இந்நிலையில், அடுத்த வருடம் இலாபம் ஈட்டப்படும் என நம்புவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.