Saturday, October 29, 2016

புத்தளத்தில் 26 வருடங்களாகியும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமையையிட்டு ஆர்ப்பாட்டம்

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து 26 வருடங்கள் கடந்துள்ள நிலையில், தமது அடிப்படை வசதிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என தெரிவித்து புத்தளம் வாழ் முஸ்லிம் மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் இன்று ஜூம்மா தொழுகையின் பின்னர் புத்தளம் தில்லையடி ரக்மல்யாய பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை புத்தளம் வாழ் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட வெளியேற்றப்பட்ட சிவில் சமூகம் ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது மகஜர் ஒன்றும் புத்தளம் உதவி மாவட்ட செயலாளர் W.M.C.K. வன்னிநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
Disqus Comments