புத்தளத்திலிருந்து புறப்பட்டு சென்ற வேனும் ரயிலும் நாகவில்லு பகுதியில் இன்று (29-10-2016) விபத்துக்குள்ளானது.
வேனில் பயணித்த நால்வர் சிறு காயங்களுடன் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேநேரம் விபத்துக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை.
ஸ்தலத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிசார் விபத்து தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெரிவிக்கின்றன.