பாகிஸ்தானில் பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில், பொலிஸ் பயிற்சியில் ஈடுபட்ட 61 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவில் நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 118 பேர் காயமடைந்துள்ளனர்.
பயங்கரவாதிகள் மூவர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பலூசிஸ்தான் மாகாண உள்துறை அமைச்சர் சர்ஃபராஸ் புக்தி குறிப்பிட்டுள்ளார்.
வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட அங்கியுடன், பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்குள் நுழைந்து, பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதில் பயங்கரவாதி ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடைபெற்றபோது கல்லூரியில் சுமார் 700 பயிற்சிப் பொலிஸார் இருந்துள்ளனர்.