இதற்கமைவாக இதுவரை அறவிடப்பட்ட 11% வெற்வரி 15% வரை அதிகரிப்பட்டுள்ளது.
இருப்பினும் 74 அத்தியாவசியப் பொருட்கள் வற் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருப்பதாகவும் நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ நிர்வாகத்தில் மத்தள விமானநிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட வீண் செலவுகள்அதிகரித்திருந்தன. இவற்றுக்காகப் பெறப்பட்ட கடன்கள் மீள செலுத்தப்படவேண்டியுள்ளன. இவ்வாறான நிலையிலேயே வற்வரியில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்தச் சட்டமூலம்53 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 23 வாக்குகளும் அளிக்கப்பட்டன. எதிர்க்கட்சி தரப்பில்அமர்ந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும், மக்கள் விடுதலை முன்னணிபாராளுமன்ற உறுப்பினர்களும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தனர். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றஉறுப்பினர்கள் வாக்களிப்பின்போது சபையில் இருக்கவில்லை.
அரசாங்கத்தால் முன்னர் சமர்ப்பிக்கப்பட்டிருந்த வற் வரி திருத்தச்சட்டமூலம் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு அமையகைவிடப்படவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் புதிய வற் வரித் திருத்தம் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் மீதான விவாதம் நேற்று (26)நடைபெற்றமைகுறிப்பிட்டத்தக்கது..
பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்தச் சட்டமூலம் மற்றும் 3 சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. துறைமுகம், விமான நிலைய அபிவிருத்தி திருத்தச்சட்டமூலம் திருத்தத்துடன் நிறைவேற்றப்பட்டது. தேசத்தை கட்டியெழுப்பும்வரி சட்டமூலம் திருத்தத்துடன் நிறைவேற்றப்பட்டது. ஒதுக்கீட்டுச் சட்டமூலம் திருத்தத்துடன் நிறைவேற்றப்பட்டது.
விவாதத்திற்கு பதிலளித்த நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, மக்கள் பாவனைக்கான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும்சேவைகள் சம்பந்தப்பட்டவற்றுக்கு வற் வரி இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்நுகையில்
“பொது மக்களுக்கு பாரிய சுமையை ஏற்படுத்தாத வகையிலேயே வற் வரியில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது, இதன்மூலம் இவ்வருடத்தில் 180 கோடி ரூபா வருமானம் எதிர்பார்க்கப்பட்டள்ளது. இந்த வரி திருத்தத்தின் மூலம் 1000 கோடி ரூபாவைவருமானமாக எதிர்பார்த்திருந்தோம். எனினும் மே மாதம் முதல் இதனை நடைமுறைப்படுத்தியதால் எதிர்பார்த்த வருமானம் 600 கோடி ரூபாவாகக் குறைந்தது அமைச்சர் கூறினார்.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆரம்பித்துவைத்தார்.அவர் தனது உரையில் மருத்துவ பரிசோதனைகள், சத்திரசிகிச்சைமற்றும் குருதிமாற்று சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கு 'வற் 'வரி அறவிடப்படவிருப்பதாக தவறான கருத்துக்கள்முன்வைக்கப்படுகின்றன. அவ்வாறு எதுவம் இடம்பெறாது. மக்களின் நன்மையைகருத்தில் கொண்டு வற் வரியிலிருந்து இவைநீக்கப்பட்டுள்ளன.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்களுக்கான வட்டியைச் செலுத்துவதற்கான வருமானத்தைஈட்டும் நோக்கிலேயே வரி அறவீட்டில் கவனம் செலுத்தியுள்ளோம் கட்டட நிர்மாணத்துறை அபிவிருத்தியடைந்து வருவதால்அவற்றுக்கான வரி நீக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன்களுக்கான வரி அறவீடும் நீக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள்வற் வரி அறவீட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் போன்களுக்கு வற் வரி அதிகரிக்கப்படாது.
2015ஆம் ஆண்டு ஜனவரியின் பின்னர் வற் வரி கோப்புக்கள் அதிகரித்துள்ளன.
694000 ஆகக் காணப்பட்ட வற் வரி கோப்புக்கள்தற்பொழுது 14 இலட்சத்து 50 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 1998ஆம் ஆண்டு நாட்டின் வருமானம் மொத்த உள்நாட்டுஉற்பத்தியில் 22 வீதமாகக் காணப்பட்டது.
2015ஆம் ஆண்டில் இது 10.3 வீதமாக வீழ்ச்சி கண்டது. இருந்தபோதும் இவ்வருடம்தேசிய வருமானத்தை 14 வீதமாக அதிகரிக்க முடியும். வற் வரியை அதிகரிக்க அரசாங்கத்துக்கு விருப்பமில்லை. இருந்தபோதும் கடன்சுமையை குறைக்க வேண்டிய தேவைப்பாடு இருப்பதால் விருப்பமில்லாத நிலையில் வரி அறவீட்டைஅதிகரிக்கவேண்டியுள்ளது. பொருளாதாரம் சரியான பாதையில் முன்னேறிச் செல்ல ஆரம்பித்ததும் வரி அறவீடுகள் விரைவில்குறைக்கப்படும்.
சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு அமையவே அரசாங்கம் செயற்படுவதாக சிலர்குற்றஞ்சாட்டுகின்றனர். எனினும், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை வெள்ளைக்காரர்கள் எமக்குக் கற்றுத்தரவேண்டியதில்லை. வருமானம் ஈட்டும் செயற்பாட்டில் நாம் சரியான பாதையில் செல்கிறோம். இம்மாதம் இலங்கை வந்திருந்தசர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் இதனை பாராட்டியுள்ளனர்.
இறைவரித் திணைக்களம் உள்ளிட்ட சகல திணைக்களங்களின் கோப்புக்களை பேணும் முறை உள்ளிட்டவை டிஜிட்டல்மயப்படுத்தப்பட்டு வருகின்றன. ஒன்றிணைக்கப்பட்ட கணக்கு முறையொன்றை எதிர்வரும் மாதங்களில் செயற்படுத்தமுடியும். இதனூடாக தேசிய வருமானத்தை அதிகரிக்க முடியும் என்ற எமக்கு நம்பிக்கை உண்டு என்று நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்தார்.