மத்திய இத்தாலியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏறக்குறைய 300 பேர் நிலநடுக்கத்தால் பலியான பகுதிக்கு மிக அருகேயுள்ள ஓரிடத்தில் சக்தி வாய்ந்த ஒரு நிலநடுக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் குறித்த ஆரம்ப கட்டத் தகவல்கள் நிலநடுக்கத்தின் அளவு 6.6-ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து தகவலேதும் இல்லை.
இத்தாலியின் பெருகியா நகரின் தென் கிழக்கு பகுதியில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்துள்ளது.
இந்த பகுதியில் இருந்து 150 கிலோமீட்டருக்கு மேலான தொலைவில் உள்ள ரோம் நகரில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.