Friday, October 28, 2016

அதிகாரமும் பதவியும் நிரந்தரமானது அல்ல புத்தளத்தில் அமைச்சர் றிஷாட் ஊடகப்பிரிவு

’’அதிகாரமும் பட்டமும் பதவிகளும் நிரந்தரமானதோ நிலையானதோ அல்ல இவைகள் அனைத்தும் தற்காலிகமானதே என்பதை அரசியல் செய்யும் அன்பர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள் என்று -அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்’’.

புத்தளம் நகரில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களை ஆரம்பித்து வைத்த பின்னர் புத்தளம் மஸ்ஜித் வீதியில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.

அமைச்சர் இங்கு கூறியதாவது
வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் அகதிகளுக்கு புத்தளம் வாழ்வளித்தபூமி இந்த மண்ணையும் இந்த மக்களையும் நாம் நேசிக்கின்றோம் நீண்டகாலமாக இந்தப் பிரதேச மக்கள் பாரளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்து தவிக்கின்றனர். புத்தளம் தொகுதி மக்களிடம் ஒற்றுமையில்லாத காரணத்தினாளேயே தான் இந்த நிலை நமக்கு ஏற்பட்டது. அரசியல்வாதிகளும், ஆன்மீகத் தலைவர்களும், புத்திஜீவிகளும் சமுதாயத்தின் நன்மைக்காக புரிந்துணர்வுடன் கலந்து பேசி சில இணக்கப்பாடுகளை ஏற்படுத்தியிருந்தால் புத்தளம் தொகுதிக்கு பாரளுமன்ற பிரதிநிதித்துவம் எப்போதோ கிடைத்திருக்கும்.

இந்த தொகுதிக்கு பிரதிநிதித்துவம் இல்லாத தாக்கம் அதனை அண்டியுள்ள முஸ்லிம் பிரதேசங்களிலும் ஏற்பட்டு இருக்கின்றது. கடந்த காலங்களில் புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்தியிலும் அந்த மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் நாம் அக்கறை காட்டியுள்ளோம். இந்தத் தொகுதியில் உங்களுக்கு எவ்வாறான அக்கறையுள்ளதோ அதே போன்ற அக்கறை எனக்கும் இருக்கின்றது என்பதை நான் இதய சுத்தியுடன் கூறுகிறேன்.

புத்தளம் வாழ் மக்களுக்கு பாரளுமன்ற பிரதிநிதித்துவம் எட்டாக்கனியாக இருந்ததால் தான் எமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனக்கு கிடைத்த ஒரே ஒருதேசியப்பட்டியல் பதவியை உங்களுக்கு வழங்கியது நமது சமுதாயம் தலைநிமிர்ந்தும் தன்மானத்துடனும் கெளரவத்துடனும் வாழ வேண்டும் என்பதற்காகவே கட்சியொன்றை ஆரம்பித்தோம் இந்த கட்சியில் உள்ள அத்தனைபேரின் தியாகத்துக்கும் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த பரிசே தேசியப்பட்டியலில் எம்.பி பதவியாகும். அதனை நேர்மையும் நல்ல பண்பும் இறைவனுக்குப் பயந்த சுபாவமும் கொண்ட மூத்தஅரசியல்வாதியான நவவிக்கு வழங்கி இந்த மண்ணை கெளரவித்தோம். ஏச்சுகளுக்கும் திட்டுக்களுக்கும் மத்தியில் பல்வேறு தடைகளையும் தாண்டி தைரியமாக இந்த முடிவினை எடுத்தோம் எதிர்காலத்தில் நீங்கள் ஒற்றுமையோடு செயற்பட்டால் இழந்த பாரளுமன்ற பிரதிநிதித்துவம் இலகுவாக கிடைக்கும்  கட்சிகளையும் ஆட்களையும் கோஷங்களையும் மையப்படுத்தி அல்லது பிரிந்து நின்று அரசியல் நடத்தியதால் தான் பல தசாப்தங்களாக பிரதிநிதித்துவத்தை இழக்கவேண்டிய துர்ப்பாக்கியம் நமக்கு ஏற்பட்டது என்பதை நீங்கள் நினைத்துப்பார்க்க வேண்டும்.

கடந்த காலங்களில் இந்தப் பிரதேசத்தில் நாம் மேற்கொள்ள ஆயத்தமான அபிவிருத்தித்திட்டங்களுக்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. 60 கோடி ரூபா செலவில் தொழில்நுட்பக்கல்லூரி ஒன்றை நாம் அமைக்க முயற்சி செய்த போது அரசியல்காய் நகர்த்தல்களால் அந்தப் பணம் திரும்பிச் சென்றுவிட்டது.

எனினும் புத்தளத்துக்கு உயர்கல்விக்கல்லூரியொன்றை அமைப்பதற்காக ஜனாதிபதியுடனும் அது தொடர்பான அமைச்சர்களுடனும் பேச்சு நடத்தி அதற்கான அனுமதியைப் பெற்று இருக்கின்றோம் அதே போன்று புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு 200மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. புத்தள தொகுதியின் பாதை நிர்மாணத்துக்கென ரூபா 300 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு வார காலத்துக்குள் இந்த பணிகளை ஆரம்பிக்கவுள்ளோம்இது தவிர புத்தளம் மாவட்ட மாணவர்களின் கல்விநிலை மேம்பாட்டிற்காக அரச உயர்மட்டத்துடன் நவவி எம் பி பேச்சு நடத்தி பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார் இவ்வாறு அமைச்சர் கூறினார்.


இந்த நிகழ்வில் எம்.பிக்களான நவவி இஷாக் புத்தளம் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அலி சப்ரி முன்னாள் நகரசபை உறுப்பினர் அலிக்கான் உட்பட பலர்கலந்துகொண்டனர்.



Disqus Comments