அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் மீண்டும் இணைந்துகொண்ட முன்னாள் பிரதியமைச்சரும், முன்னாள் புத்தளம் நகரசபைதலைவருமான கே.ஏ. பாயிஸ் அவர்களை வரவேற்கும் சினேகபூர்வுநிகழ்வு நேற்று (27) வியாழக்கிழமை கட்சியின் "தாருஸ்ஸலாம்" தலைமையகத்தில் புத்தளம் தொகுதியின் கட்சி ஆதரவாளர்களோடுஇடம் பெற்றது.
இந்நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப்ஹக்கீம் அவர்களோடு இணைந்து வடமேல் மாகாணசபை உறுப்பினர்எச்.எம். நியாஸ் மற்றும் புத்தளம் தொகுதியின் முஸ்லிம் காங்கிரஸின்மத்திய குழுக்களின் அங்கத்தவர்களும் கட்சிப் போராளிகளும், கலந்துகொண்டனர்.
புத்தளம் தொகுதியில் எதிர்காலத்தில் முன்னெடுக்கவிருக்கும் கட்சிமற்றும் அரசியல் பணிகள் தெடார்பாகவும் இதில் விரிவாககலந்துரையாடப்பட்டது.
ஷபீக் ஹுஸைன்