அடையாளம் தெரியாத விமானம் ஒன்று மியன்மார் நாட்டின் மேற்கு கடற்பகுதியில் விபத்துக்குள்ளாகியிருப்பதாக அந்தநாட்டு விமானப் போக்குவரத்து திணைக்களம் கூறியுள்ளதாக வௌிநாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான விமானம் பற்றியும், விபத்து இடம்பெற்ற இடத்தை அடையாளம் காண்பதற்காகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடக செய்திகள் கூறுகின்றன.
எவ்வாறாயினும் அது தமது நாட்டு விமானம் அல்ல என்பது ஆரம்ப பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக அந்த நாட்டு விமானப் போக்குவரத்து திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.