(ரஸீன் ரஸ்மின்) கற்பிட்டி பஸ்தரிப்பு நிலையம் மற்றும் சந்தைக் கட்டடத் தொகுதி என்பவற்றின் மீள்கட்டுமாண பணிகள் மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது இந்த இரண்டு அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்பட்டதுடன், பின்னர் போதிய நிதியின்றி பணிகள் யாவும் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில், குறித்த பஸ் நிலையம் மற்றும் சந்தைக் கட்டடத் தொகுதி என்பவற்றை மீள்புனரமைப்பு செய்து தருமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளர் எம்.என்.எம். நஸ்மி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
குறித்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பிரதமர், குறித்த இரண்டு பணிகளையும் உடனடியாக ஆரம்பிக்குமாறு புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழு தலைவருமான ஹெக்டர் அப்பு ஹாமிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இப்பணிப்புரைக்கமைய கற்பிட்டி பஸ்தரிப்பு நிலையம் மற்றும் சந்தைக் கட்டடத் தொகுதி என்பவற்றின் மீள்கட்டுமாண பணிகளுக்காக மாவட்ட அபிவிருத்தி குழு ௯ட்டத்தில் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், ஆரம்ப பணிகளும் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழு தலைவருமான ஹெக்டர் அப்பு ஹாமி, ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளர் எம்.என்.எம். நஸ்மி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.