ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன மற்றும் நிதி அமைச்சர் ரவி கருனாநாயக்க ஆகியோருக்கு இடையில் கடுமையான கருத்து வேறுபாடு நிலவுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிடுள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டுள்ள அவர்...
ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன மற்றும் நிதி அமைச்சர் ரவி கருனாநாயக்க ஆகியோருக்கு இடையில் கடுமையான கருத்து வேறுபாடு நிலவுவதை நாம் உணர்ந்துகொள்ள கூடியதாக உள்ளது.ஜனாதிபதி மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகளுக்கு மாற்றமாக நிதி அமைச்சர் நடந்துகொள்கிறார்.
வெட் வரி தொடர்பில் மக்களுக்கு சுமையை வழங்க கூடாது என ஜனாதிபதி கூறிய போதும் அதில் பெரிதாக திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை.
இலங்கையில் பெண்கள் பியர் அருந்துவது அதிகரித்துள்ளதாகவும் அது பாரிய கலாசார சீரழிவு என ஜனாதிபதி கூறிய போதும் பியர் கம்பனிகளுக்கு நிதி அமைச்சர் வரி சலுகை வழங்குகிறார்.
பியர் கம்பனி வெள்ளத்தில் மூழ்கியதால் வரி சலுகை வழங்கியதாக நிதி அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.பியர் கம்பனிக்கு வரி சலுகை வழங்கிய நிதியமைசருக்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் வரி சலுகை வழங்க முடியாமல் போனது ஏனோ என
அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
