பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து மாலைதீவு விலகியுள்ளது.
மாலைதீவு வெளிவிவகார அமைச்சு கடந்த 13ம் திகதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தவிர்க்க முடியாத காரணங்களால் பொதுநலவாய நாடுகள் அமைப்பில் தொடர்ந்தும் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த அமைப்பிலிருந்து விலகுவதற்கு குறிப்பான காரணத்தை தெரிவிக்க முடியாதுள்ளதாகவும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
