“நாடு செழிப்படைய வேண்டுமென்றால், மக்கள் வாழ்க்கைச் செலவு குறைக்கப்பட வேண்டுமென்றால் அரச ஸ்தாபனங்கள் நஷ்டமடைவதை தவிர்க்க அதில் முக்கிய கவனஞ் செலுத்த வேண்டும். வருடா வருடம் பல கோடிகளை இழக்கும் அரச ஸ்தாபனங்கள் அறிவும் அனுபவும் கொண்டோரால் நிர்வகிக்கப்பட வேண்டும். துறைசார் அனுபமும் அறிவும் அற்ற அரசியல்வாதிகளை அதாவது தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள், உறவினர்கள் போன்றவர்களை அங்கொன்றும் இங்கு ஒன்றுமாகத் தூவி விடுவதை நிறுத்த வேண்டும்”
மேற்சொன்ன கருத்தை தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் ஸ்தாபகர் மொஹிடீன் வாவா தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்தே கல்லெறியும் விதமாக அவரது இந்தக் கருத்து அமைந்துள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு தனது அமைப்பு ஆதரவு வழங்குவதாகவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அமைச்சு மூலம் பலருக்கும் தொழில் வழங்கப் போவதாகவும் கூறுகின்ற எனது உறவினரான மொஹிடீன் பாவா அவர்கள், அதே கட்சியை சேர்ந்த உயர்மட்ட உறுப்பினர்கள் பலரையும் இன்று பகிரங்கமாக விமர்சிக்கும் நிலைக்கும் தன்னை உயர்த்திக் கொண்டமையானது யாரின் குற்றம்?
இது மட்டுமல் இலங்கை சீனி கம்பனியின் நிதி, திட்டமிடல் ஆலோசகராகவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள அவர் இன்று அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்களையே விமர்சிக்கத் தொடங்கி விட்டார்.
1. தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பொத்துவில் மஜீத் - காரியவள கூட்டுத் தாபன தலைவர்.
2. தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் – லக்சல நிறுவனத் தலைவர்
3. தேர்தலில் தோல்வியடைந்த கல்முனை முன்னாள் மேயர்
சிராஸ் மீராசாகிப் - லங்கா அசோக் லேலன்ட் நிறுவன தலைவர்
மேற்சொன்ன மூவரையும் குறிவைத்தே முஹிடீன் பாவா இவ்வாறானதொரு பதிவை இட்டுள்ளார் என்பதில் சந்தேகத்துக்கே இடமில்லை.
மிக அண்மையிலேயே கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்து உள்நுழைந்த இவர், இன்று இவ்வாறெல்லாம் விமர்சிப்பதன் பின்புலன்களை அமைச்சர் ரிஷாத் ஆராய வேண்டும். இந்த துணிச்சலான, பகிரங்கமான மிக.மிக மோசமான கருத்துகளின் தன்மை தொடர்பில் அமைச்சர் மிகுந்த கரிசனை செலுத்த வேண்டும். இன்று இவர்களை.. நாளை அமைச்சர் ரிஷத் அவர்களையே விமர்சிக்கவும் முயற்சிக்கலாம் அல்லவா?
இதற்கெல்லாம் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் “மனிதாபிமான பலவீனமே” காரணம்.
-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்.