Thursday, October 27, 2016

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு நாளை பூட்டு


தீபாவளி (29) பண்டிகையை முன்னிட்டு நாளை 28 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க இதனைக் கூறியுள்ளார். 

இந்த விடுமுறைக்கு பதிலாக சனிக்கிழமை தினம் ஒன்றில் பாடசாலைகள் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க கூறியுள்ளார். 

இதேவேளை வருகின்ற தீபாவளி (29) பண்டிகையை முன்னிட்டு தமிழ்மொழி மூலமான தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரியர் பயிலுனர்களுக்கு நாளை 28 ஆம் திகதி விடுமுறை வழங்துவதற்கு தீர்மாணிக்கபட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவிக்கின்றார். 

இந்து மக்களின் பண்டிகையில் ஒன்றான தீபாவளி பண்டிகைக்கு, ஆசிரிய பயிலுனர்கள் நேரத்திற்கு வீடுகளுக்கு செல்வதற்கு வசதியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஆசிரிய பயிலுனர்களின் வேண்டுகோளுக்கு அமைய கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் பேசி இந்த முடிவு எடுக்கபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

அதேபோல் இந்த விடுமுறைக்கு பதிலாக தேசிய கல்வியற் கல்லூரி நடவடிக்கைகள் மேலும் ஒரு சனிக்கிழமை தினத்தில் நடாத்துவதற்கான நடவடிக்ககைள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார். 
Disqus Comments