Thursday, October 27, 2016

உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபா நட்டஈடு வழங்க கோரிக்கை


உயரிழந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கும் வட மாகாண சபையின் இன்றைய 64ம் அமர்வில் 2 நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மாணவர்கள் படுகொலைக்கு உடனடி விசாரணை வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இல்லையேல் அரச இயந்திரத்தை முடக்குவோம் என மாகாணசபை உறுப்பினர்கள் கூறியுள்ளனர். 

வடமாகாண சபையின் 64ம் அமர்வு இன்றைய தினம் மாகாணசபை பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் தம் ஆசனங்களில் இருந்து எழுந்து அவை தலைவர் ஆசனத்திற்கு முன்பாக சென்று உயிரழந்த பல்கலைக்கழக மாணவர்கள் விடயத்தில் உடனடியாக நீதி விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அரச பயங்கரவாதம் நிறுத்தப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். 

மேலும் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நட்ட ஈடாக வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துடன், மாகாணசபை ஊடாக அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் எனவும் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Disqus Comments