Sunday, October 30, 2016

மதுரங்குளியில் தேங்காய்த் திருடன் மீது தோட்டக்காவலாளியால் துப்பாக்கிப் பிரயோகம்!

புத்தளம் முந்தல் பிரதேசத்தில் இன்று (30) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுயாகமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
இன்று (30) காலை மதுரங்குளி கும்புக்கடவல வீதியிலுள்ள தோட்டமொன்றில் திருட்டுத்தனமாக தேங்காய் பறிப்பதற்காக நபர் ஒருவர் சென்றள்ளார். 

இதன்போது தோட்டத்தின் காவலாளியாக இருந்தவர், தோட்டத்தில் திருட்டுத்தனமாக தேங்காய் பறிப்பதற்காகச் சென்ற குறித்த நபரின் கால் பகுதி நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இத்துப்பாக்கிப் பிரயோகத்தினால் மங்களஎளிய புபுதுகம பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதோடு, அவர் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
குறித்த காவலாளி பாதுகாப்புக்காக தன் வசம் வைத்திருந்த அனுமதி பெறப்பட்ட துப்பாக்கியினாலேயே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(தினகரன் ஆன்லைன் - கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர் - ரஸ்மின் மொஹமட்)
Disqus Comments