(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) ஜாமிஆ நளீமியாவின் பிரதிப் பணிப்பாளரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித் தலைவருமான அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முகம்மத் (நளீமி) அவர்களின் பாரியார் இன்று பிற்பகல் கம்பளை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
நுவரெலியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பகலுணவுக்காக வாகனத்தை வீதியோரம் நிறுத்திவிட்டு அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முகம்மத் அவர்களும் அவர்களோடு பயணித்தவர்களும் உணவகம் ஒன்றுக்குச் சென்றுள்ளனர். எனினும் அவரது பாரியார் மாத்திரம் காருக்குள் இருந்துள்ளார்.
இந் நிலையில் பின்புறமாக வந்த லொறி ஒன்று காருடன் மோதியுள்ளது. இதனால் படுகாயமடைந்த அவர், கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.