கண்டி ,தெல்தோட்டை நகரத்திற்கு மிக அருகாமையில் உள்ள வீட்டு தோட்டத்தில் ஒரு பகுதி சமார் ஒரு மாத காலமாக தீ பற்றி எரிகிறது. வெயில் வெப்பத்தினால் என நினத்திருந்த வீட்டார் நேற்று தெல்தோட்டை மத்திய கல்லூரியின் அதிபர் ஜெமீல் அவர்களை அழைத்துச் சென்று பார்த்த போது ஆச்சர்ய பட நேர்ந்தது. இது குறித்து அதிபர் அவர்கள் தனது முகநூலில் பின்வருமாறு பதவொன்றை இட்டுள்ளார். குறித்த தோட்டத்திலிருந்து நெருப்பு சுவாலை தொடர்ந்து எழுகிறது மெதேன் வாயு வெளியேற்றமா அல்லது சிறிய அளவான பூகம்பமா என தெரியவில்லை ஒரு வித தொண்டை புகைச்சலும் ஏற்படுகின்றது.
யாராவது புவியல் ஆய்வு உத்தியோகத்தரை அனுப்பினால் அங்கிருந்து ஏதாவது ஆபத்து ஏறபடுவதற்கு முன் தடுக்கலாம், என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக தமது கவனத்தை கூடிய விரைவில் மேற்கொள்ளுமாறு தெல்தோட்டை மக்கள் சார்பாக Shoora News Srilanka கேட்டுக் கொள்கின்றது.
