பாகிஸ்தானின் முக்கிய திரையரங்குகள் இந்தியத் திரைப்படங்களை திரையிடப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளன.
இரு நாடுகளுக்கிடையே பதற்ற நிலை அதிகரித்ததை அடுத்து, பாகிஸ்தான் நடிகர் நடிகைகள் இந்திய திரைப்படங்களில் நடிக்க இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது.
இதனை அடுத்து நேற்று பாகிஸ்தானின் முக்கிய திரை அரங்குகளில் இந்திய திரைப்படங்களை திரையிடப் போவதில்லை என பாகிஸ்தான் திரையரங்குகள் முடிவெடுத்துள்ளன.
பாகிஸ்தானின் இராணுவத்துக்கு ஆதரவாக தாங்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக அவை கூறுகின்றன. லாகூர், கராச்சி மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய பெரு நகரங்களில் இந்தியப் படங்களுக்குத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.