Thursday, October 27, 2016

வேலையில்லாத பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி கொழும்பில் ஆா்ப்பாட்டம்.


அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் நவம்பர் 02 திகதி கொழும்பு கோட்டையில் ஒன்றுகூடவுள்ளதா அறிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள அனைத்து வேலையிலா பட்டதாரிகளையும் நவம்பர் 02 திகதி குறித்த இடத்திற்கு வரும்படி  தனது சமூக வளைத்தளத்தில் அழைப்பு விடுத்துள்ளது.இதன் போது ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மகஜர் வழங்கபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்த போதிலும் வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகள் விடயமாக அரசாங்கம் உரிய கரிசனம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலை தொடருமானால் எதிர்காலத்தில் மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியினை விடுத்து ஏனைய தொழில் துறையில் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டிய தேவை ஏற்படும்  இது இலங்கை கல்வி கட்டமைப்புக்கு சவாலாக அமையும்.

நவம்பர் 02 திகதிய கோரிக்கை :

*-தொழில்களை வென்றெடுப்பதற்காக ஒன்றுபடுவோம் .
* -2017 ம் வருட வரவு செலவு திட்டத்தில் தொழில் வழங்க நிதி ஒதுக்கிடு .
*வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கு.
*அரச சேவைக்கு சேர்த்துக்கொள்ளு வயதெல்லையை 45 ஆக அதிகரி .
*-அனைத்து மாகாணங்களிலும் ஆசிரிய போட்டி பரீட்சை சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரிய நியமனம் வழங்கு.
* -அரசியல் சார்ந்த உறவின் மூலம் நியமனம் வழங்குவதை நிறுத்து.
*வருடாந்தம் தொழில் வழங்கும் தேசிய கொள்கை ஒன்றை உருவாக்கு.


ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்

Disqus Comments