மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் கூறினார்.
ஏறாவூர், முகாந்திரம் வீதி, முதலாம் ஒழுங்கையிலுள்ள வீடொன்றுக்குள் கடந்த மாதம் 11 ஆம் திகதி 56 வயதான நூர் முஹம்மது உஸைரா மற்றும் அவரது மகளான 32 வயதான ஜெனீரா பானு மாஹிர் ஆகியோரது சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையின்போது இவ்விருவரும் கொலை செய்யப்பட்டமை உறுதிசெய்யப்பட்டிருந்தது.