சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு நேற்று (05-10-2016) தாமரைத்தடாகம் கலையரங்கில் நடைபெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.
கல்வி அமைச்சு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 800 பேர் ஜனாதிபதியால் கௌரவிக்கப்பட்டனர்.