புதிய A320 NEO வகை விமானங்கள் ஐந்து இலங்கை விமான சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக, ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் தெரிவித்துள்ளது.
குத்தகைக்கு பெறப்படும் குறித்த விமானங்கள் 2017ம் ஆண்டு முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
இதேவேளை, நவம்பர் மாதம் முதல் லண்டனுக்கான விமான வேவையிலும் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.
இதன்படி தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் லண்டனுக்கான விமான போக்குவரத்துக்களை ஒரு வாரத்துக்கு ஒன்பதாக அதிகரிக்கவுள்ளதாகவும் ஶ்ரீ லங்கள் எயார் லைன்ஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.