Wednesday, October 5, 2016

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு! Nobel Prize- 2016 #Chemistry Updates.

ந்த ஆண்டிற்கான நோபல் பரிசுகள் இந்த வாரம் முழுவதும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மருத்துவம் மற்றும் இயற்பியல் துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்து இன்று வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டிற்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த, ஜான் பியர் சாவேஜ், அமெரிக்காவைச் சேர்ந்த , சர்.ஜெ.ஃபிரேசர் ஸ்டோடர்ட் மற்றும் நெதர்லாந்தை சேர்ந்த பெர்னார்ட் ஃபெரிங்கா ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

BREAKING NEWS 2016  in Chemistry to Jean-Pierre Sauvage, Sir J. Fraser Stoddart and Bernard L. Feringa
உலகின் மிகச்சிறிதான இயந்திரங்களை வடிவமைத்ததற்காக இவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது. அதாவது மூலக்கூறுகளின் உதவியுடன், பல மூலக்கூறுகளை இணைத்து, ஒரு இயந்திரமாக வடிவமைத்திருக்கின்றனர். இவர்கள் வடிவமைத்த இந்தச் சிறிய இயந்திரங்கள் மனித முடியை விட, 1000 மடங்கு சிறியவை. வேதியியல் ஆற்றலை, இயந்திர ஆற்றலாக மற்றும் இயக்கங்களாக மாற்றும் பண்பை இந்த மூலக்கூறு இயந்திரங்கள் கொண்டுள்ளன

வரும் வெள்ளிக்கிழமை நடக்கும் நிகழ்ச்சியில், அமைதிக்கான நோபல் பரிசும், 10-ம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட இருக்கின்றன.
Disqus Comments