புத்தளம் இளைஞர்கள் யுவதிகள் மாணவர்கள் காலடிக்கு வரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறக் கூடாது. அறிவிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் சனூஸ் மொஹமட் பெரோஸ், ஜுனைத் எம் ஹாரிஸ், A.T.M.பஸ்லி, சப்ராஸ் அபூபக்கர், சரீப் மிஹ்லார், மொஹமட் நாபில் உட்பட பலரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
பிறை நிலா சஞ்சிகையுடன் தொடர்பு கொண்டு புத்தளத்திலும் இது போன்ற ஊடக செயலமர்வு ஒன்றினை புத்தளம் பிரதேசத்தில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் "அல்ஹனா மகளிர் அமைப்பு" www.puttalamonline.com இணையத்தள செய்தி வழங்குனர்களோடு இணைந்து மேற்கொண்டுள்ளமை மிகவும் வரவேற்கத்தக்கது. மகளிர் அமைப்புக்களுக்கு இது ஒரு சிறந்த முன்மாதிரியாகும்.