(RISVI THOWFEEK) பு/விருதோடை மு.ம.வித்தியாலயத்தில் தரம் 10யில் கல்வி கற்கும் M.S.M. அஷ்பர் என்ற மாணவன் சூழலில் கிடைக்கும் பாவனைக்குதவாத கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி விஞ்ஞான ஆசிரியர் A.A.M ஜிப்ரி அவர்களின் வழிகாட்டலிற்கிணங்க இயங்கும் இயந்திர மனிதன்(ROBOT) ஒன்றை வடிவமைத்துள்ளார்.
இவ்வாக்கமானது முன்,பின் இயங்கும் தன்மை கொண்டதோடு கட்டளைக்கு ஏற்ப தலையை அசைக்கும் திறன் கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இம் மாணவனின் திறனை பாடசாலை அதிபர் M.H.M.அமீர் அவர்கள் வாழ்த்தி உற்சாகப்படுத்தியதோடு தொடர்ந்து இவ்வாறான திறன் வெளிப்பாட்டு விடயங்களில் கவனம் செலுத்துமாறும், மாணவனுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குமாறு விஞ்ஞான ஆசிரியரிடம் கேட்டுக் கொண்டார்.
இம் மாணவன் பல்வேறு துறைகளில் தனது திறனை வெளிக்காட்டி வரும் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. நாமும் இம்மாணவனை வாழ்த்தி உற்சாகப்படுத்துகின்றோம்.
மேற்படி மாணவனால் உருவாக்கப்பட்ட றோபோவின் வீடியோ