பட்டதாரிகள் என்று இலங்கைப் பல்கலைகழகங்களில் இருந்து வெளியாகுபவா்கள், வேலையில்லாத பட்டாதரிகள் என்ற தொரு அடைமொழியைப் பெற்றுக் கொள்கின்றனா். பட்டதாரியாக ஒரு வெளியான பின்னா் எவ்வளவு காலத்தினுள் அரசாங்க வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ள முடியும் என்ற ஒரு கொள்கையை இந்த அரசாங்கமும், எந்த அரசாங்ககும் அறிமுகம் செய்யாதது படித்த சமூகத்துக்கு செய்யும் ஒரு அநீதியாககே பார்க்கப்படுகின்றது. தங்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குங்கள் என்று கூறி காலகாலமாக அரசாங்கத்துக்கு எதிரான ஆா்ப்பாட்டங்கள் இலங்கை போன்ற நாடுகளில் சா்வசாதாரணமாகி விட்டது. அந்த வகையில்,
நேற்று (02-11-2016) வேலையில்லாப் பட்டதாரிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 2017ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பிற்கான நிதியை ஒதுக்கும்படி கோஷங்களை எழுப்பினர்.
தற்போது நாட்டில் பல வெற்றிடங்கள் இருப்பதாக சுட்டிக் காட்டினார்கள் அதன்படி
- ஆசிரியர் வெற்றிடம் 32000
- தகவல் அறியும் உத்தியோகத்தா் வெற்றிடம் 8000
- அபிவிருத்தி உத்தியோத்தர் வெற்றிடம் 10000.
இருப்பினும் 2012ம் ஆண்டில் இருந்து 2016ம் வரைக்கும் 30000 ம் வேலையில்லாப் பட்டதாரிகள் மட்டுமே இருப்பதாக குறிப்பிட்டனர் .
அனைவரும் உடன் வேலை வழங்கு , வயதெல்லையினை 45தாக அதிகரி, அரசியல் தலையீடுகள் இன்றி வேலை வழக்கு, வருடம்தோறும் பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் திட்டத்தை உருவாக்கு போன்ற சுலோகங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
(நன்றி லங்கா தீப)