சவூதி அரேபியா, நவ-02 கடந்த மாதம் தான் ஒரு சவுதி இளவரசர் ஒருவருக்கு 'கொலைக்கு கொலை' என்ற இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் தலை துண்டிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது முழு உலகின் பார்வையையும் ஆச்சரியத்துடன் சவுதியை நோக்கி திருப்பியது.
இந்நிலையில், மேலும் ஒரு இளவரசருக்கு கடந்த திங்கட்கிழமையன்று மாலை சவுக்கடியுடன் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ள செய்தியை சவுதியிலிருந்து வெளிவரும் OKAZ எனும் அரபு தினசரியில் இன்று செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
ஜெத்தா நகர சிறையில் நிறைவேற்றப்பட்ட இந்த தண்டனை,'சட்டத்தை மீறிய குற்றத்திற்காக'எனக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர என்ன குற்றமென விளக்கமாக சொல்லப்படவில்லை. சவுக்கடியை தொடர்ந்து இளவரசர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.