(முஹ்சி ஆசிரியா்) அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு நேற்று புத்தளம் வைத்தியசாலையில் பிள்ளைப்பேறு வார்ட்டில் ஒரு கட்டிலில் மூன்று பேர் இருப்பதாகவும் சில தாய்மார்கள் கீழே இடம் இல்லாமல் உறங்குவதாகவும் தனது மனவேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.
அவர் சொல்வது அனைத்தும் உண்மை இவ்வைத்திய சாலையைப்பொறுத்த வரை சகலயின மக்களும் சேவை யைபெற்றுக்கொள்ளுகிறார்கள். மகப்பேற்று வார்ட்டைப்பொறுத்தவரை இடப்பற்றாக்குறை காரணமாக இவ்வாறான நிலைமை ஏற்படுவது தவிர்க்கமுடியாத ஒன்று.
புத்தளத்தில் V.O.G இரண்டு பேர் இருக்கிறார்கள். பிள்ளைப்பேற்றுக்காக இவ்வைத்தியசாலையை நாடுகிறார்கள் குறைந்த பட்சம் ஒரு மாதம் 600 பிள்ளைகள் சராசரியாக பிறக்கின்றார்கள். ஒரு நாளைக்கு 28, 29, 30 என்றளவில் இதை Hospital Development Society கூடிய கவனம் செலுத்தி வருகின்றது. நாங்கள் அமைச்சர் றிஷாட் அவர்களுக்கும் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் அவர்களுக்கும், பாராளு மன்ற உறுப்பினர் நவாவி அவர்களுக்கும் நேரடியாக பேசி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இதற்கான ஒத்துழைப்பை 2017 பாராளுமன்ற நிதி ஒதுக்கீட்டை சுகாதார அமைச்சு மூலம் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தனர் இன்ஷா அல்லாஹ் பொது மக்களால் விரைவாக உதவி செய்தால் 100' நீளமும் 40' அகலமும் கொண்ட கட்டடம் அமைப்பதற்கு கிட்டத்தட்ட 1 கோடி 80 லட்சம் ரூபா செலவு ஏற்படுமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது உங்களால் முடிந்தவரை முயற்சி செய்தால் இவ்விலக்கை அடையலாம்.
இன்ஷா அல்லாஹ் நீங்கள் அல்லாஹ்விற்காக உதவி செய்வதாக இருந்தால் Hospital Development Society Puttalam -P.Bank Puttalam -- 009-2-001-4-0009916 A/C க்கு தாராளமாக அள்ளி வழங்குங்கள்.
H.M.M.Shafeek
Secretary
Hospital Development Society Puttalam
Please feel free to contact for further information
0714443656