Thursday, November 3, 2016

SLTJ இன்றைய கொழும்பு ஆா்ப்பாட்டம். பொலிஸார் குவிக்கப்பட்டன. காவலரண்கள் பாதையில் (படங்கள் இணைப்பு)

GSP+ வரிச் சலுகை பெற்றுக் கொள்வதற்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் குறிப்பாக, திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஜரோப்பிய ஒன்றியம் கோரிக்கை வைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டுள்ள நிலையில் இதனூடாக முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்படுவதால் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மாபெரும் உரிமை மீட்பு போராட்டம் ஒன்றை இன்று கொழும்பில் முன்னெடுத்துள்ளது.

இன்று நண்பகல் மாளிகாவத்தையில் பேரணி ஆரம்பமாகி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் ஆர்பாட்டம் இடம்பெற உள்ள நிலையில் தற்பொழுது குறிப்பிட்ட பேரணியை மில்டன் பெரேரா மாவத்த்தில் போலீசார் தடுப்பு அரண்களை போட்டுள்ளதாகவும் மீறும் பட்சத்தில் கண்ணீர்ப்புகை பிரயோகிக்க வாய்ப்புள்ளதாகவும் அங்கிருக்கும் எமது நிருபர் தெரிவிக்கின்றார்.

குறிப்பிட்ட பேரணி தற்போது தடுப்பு அரணுக்கு பக்கத்தில் நின்று ஆர்பாட்டங்களை மேற்கொள்வதாகவும் தெரிய வருகிறது.

- Azeem Jawfer- 
















Disqus Comments