(சாய்ந்தமருது முஹம்மட் றின்ஸாத் ) முன்னைய காலங்களில் ஏதாவது ஒரு வீட்டில் தான் தொலைபேசி இருக்கும் வெளிநாடுகளில் தொழிலுக்காக தங்கள் கணவர்கள் சென்றால் அந்த வீட்டிற்கு தான் சென்று பேச வேண்டும் என்ற நிா்ப்பந்த நிலை இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் சிறியவர்கள் பெறியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரிடமும் தொலைபேசி இருக்கிறது என்றால் அது மிகையாகாது.
அதேபோல் முன்னைய காலப்பகுதிகளில் வெளிநாடுகளில் தொழிலுக்காக தங்கள் கணவர்கள் சென்றால் தபால் மற்றும் தொலைபேசி மூலமான மட்டுப்படுத்தப்பட்ட உரையாடல்களே மட்டுமே இருக்கும். நவீன காலத்தில் தொழில்நுட்ப வளா்ச்சியின் காரணமாக IMO, WhatsAPP, VIBER, SKYPE போன்றவற்றில் மூலம் அதிகமான நேரங்களை நமது முஸ்லிம் பெண்களும், ஆண்களும் செலவிடுவதை பார்க்க கூடியதாக இருக்கின்றது. அத்தோடு நின்று விடாமல் வீடியோ நேரடி உரையாடல் மூலம் பேசுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பிட்ட ஒரு சாட்டிங் சேவையை எடுத்துக்கொண்டால் நீங்கள் அனுப்பும் மெசேஜ்கள் உள்ளிட்ட படங்கள், வீடியோக்கள் WhatsAPP Server க்கு போய்த்தான் மீணடும் குறிப்பிட்ட நபரை அடைகிறது. நீங்கள் நினைப்பது போல நேரடியாக உரியவருக்கு சென்று அடைவதில்லை என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
நீங்கள் உங்கள் நிர்வாண படத்தை அனுப்பினால் அந்தப்படம் வாட்ஸ்அப் சேவருக்கு சென்றே மீண்டும் உங்கள் கணவனுக்கு செல்கிறது. அது மாத்திரமின்றி இதன் மூலம் பல பிரச்சினைகள் உருவாக காரணமிருக்கிறது.
அன்பிற்குரிய என் முஸ்லிம் சகோதர சகோதரிகளே இந்த விடயத்தில் சற்று கரிசனை காட்டி குறிப்பிட்ட விடயத்தில் இருந்து தவிர்ந்து முஸ்லிம்களின் மானத்தை காப்பாற்றுமாறு வினயமாக கேட்டுக்கொள்கின்றேன்.