சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள உணவகங்களில் நாய் இறைச்சியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பல உணவகங்களுக்கும் அந்நாட்டு சுகாதார தினைக்களத்தினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
ஜித்தா நகரில் குலைல், அல்கும்றா ஆகிய இடங்களில் உள்ள உணவகங்களில் நாய் இறைச்சியை உணவுக்காக பரிமாறப்படுவதாக அந்நாட்டு (வலேதியா) சுகாதார திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் (2016-10-23) அங்கிருந்த பல உணவகங்கள் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இத்தேடுதல் நடவடிக்கையின் போது பல உணவகங்களில் நாய் இறைச்சி பரிமாறப்பட்டது உறுதிசெய்யப்பட்டதுடன் இவ்விடயத்தில் தொடர்புடையோர்களான பாக்கிஸ்தான் நாட்டை சேர்ந்த சிலரும் மற்றும் எமன் நாட்டை சேர்ந்த சிலரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்மந்தப்பட்ட உணவகங்கள் நிரந்தரமாக சீல் வைத்து மூடப்பட்டுள்ளன.