Saturday, February 23, 2013

சரத் பொன்சேகா விருதோடைக்கு விஜயம்


ஜனநாயக தேசியகூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் இராணுவ தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா திருமண வைபவமொன்றில் கலந்து கொள்தவற்காக வேண்டி நேற்று வெள்ளிக்கிழமை (22.02.2013) விருதோடைக்கு விஜயம் செய்தார். 

 ஐக்கிய தேசியக் கட்சியின் விருதோடை கிளை ஒருங்கிணைப்பாளர்  ARM. ரபாத் அமீன்  அவர்களின் வேண்டுகோளின் பெயரிலேயே இவர் இந்த திருமண வைபவத்திற்கு வருகை தந்திருந்தார்.
மேலும் வருகை தந்த அவர் விருதோடையைச் சேர்ந்த முக்கியஸ்தர்களையும் சந்தித்து கலந்துரையாடியதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெரிவிக்கின்றன.




Disqus Comments