Wednesday, August 21, 2013

3 மாகாண சபை­க­ளிலும் தபால் மூலம் வாக்­க­ளிப்­ப­தற்கு 1,11,383 பேர் தகுதி

மாகாண சபை தேர்­தலில் தபால் மூலம் வாக்­க­ளிப்­ப­தற்கு ஒரு இலட்­சத்து 11 ஆயி­ரத்து 383 பேர் தகுதி பெற்­றுள்­ள­தாக பிரதி தேர்­தல்கள் ஆணை­யாளர் எம். எம். மொஹமட் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,
இம்­முறை தேர்­தலில் தபால் மூலம் வாக்­க­ளிப்­ப­தற்கு ஒரு இலட்­சத்து 33 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்­ட­வர்கள் விண்­ணப்­பித்­தி­ருந்­தனர். இவர்­களில் ஒரு இலட்­சத்து 11 ஆயி­ரத்து 383 பேரே இத் தபால் வாக்­க­ளிப்­பிற்கு தகுதி பெற்­றுள்­ளனர்.
இதற்­கி­ணங்க தபால் மூலம் வாக்­க­ளிப்­பிற்­கான வாக்குச் சீட்­டுகள் எதிர்­வரும் 22 ஆம் திகதி தபால் திணைக்­க­ளத்­திடம் ஒப்­ப­டைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.
இதே­வேளை, தெற்­கா­சிய தேர்தல் அதி­கா­ரிகள் சங்­கத்­தி­லி­ருந்து வருகை தர­வுள்ள 17 பிர­தி­நி­திகள் வட­மா­கா­ணத்­தி­லுள்ள 5 மாவட்­டங்­க­ளிலும் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Disqus Comments