Wednesday, August 21, 2013

வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் வென்னப்புவ ஆளும் கட்சி உறுப்பினர் வைத்தியசாலையில்

கடு­மை­யான வெட்­டுக்­கா­யங்­க­ளுக்­குள்­ளான நிலையில் மாரவில வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த வென்­னப்­புவ பிர­தேச சபையின் ஆளுங்­கட்சி உறுப்­பினர் ஒருவர் மேல­திக சிகிச்­சைக்­காக கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்ளார். நேற்று முன்­தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு வென்­னப்­புவ கால­வத்தை பிர­தே­சத்தில் அமைந்­துள்ள விளை­யாட்டு மைதா­னத்­திற்­க­ருகில் வைத்தே இவர் மீது கத்திக் குத்துத் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­துடன் அவர் மாரா­வில வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தார்.

குறித்த விளை­யாட்டு மைதா­னத்­திற்­க­ருகில் வைத்து இருவர் தன்னை கூரிய ஆயு­தங்­களால் தாக்­கி­ய­தாக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள குறித்த பிர­தேச சபை உறுப்­பினர் பொலி­சா­ரிடம் தெரி­வித்­துள்ளார். முதலில் இரு தரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் வாய்த்­தர்க்கம் ஏற்­பட்­ட­தா­கவும் அதன் பின்­னரே இத்­தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் தகவல் கிடைத்­தி­ருப்­ப­தாக பொலிசார் தெரி­வித்­தனர்.

இத்­தாக்­குதல் சம்­ப­வத்தில் இருவர் சம்­பந்­தப்­பட்­டி­ருப்­ப­தாக ஊர்­ஜி­த­மா­கி­யுள்­ள­துடன் அவர்கள் இரு­வரும் இது­வரை கைது செய்­யப்­ப­ட­வில்லை எனவும் பொலிசார் மேலும் தெரி­வித்­தனர். குறித்த சந்தேக நபர்களைத் தேடிக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கும் வென்னப்புவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Disqus Comments