எகிப்தில் முஸ்லிம்களின் இரத்தம் ஓட்டப்படுவதற்கு சவூதி அரேபியா பகிரங்க ஆதரவு எகிப்தில் தொடரும் வன்முறைகளுக்கு எதிராக மேற்கு நாடுகள் எகிப்துக்கான நிதியுதவிகளை நிறுத்தினால் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் அதனை ஈடுகட்டும் என சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சர் சவுத் அல் பைசல் குறிப்பிட்டுள்ளார்.
“எகிப்துக்கான நிதியுதவிகள் ரத்துச் செய்வதாகவும் அல்லது அச்சுறுத்தும் நாடுகளுக்கு (கூற விரும்புகிறேன்) அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் செல்வச் செழிப்புடன் உள்ளன. எனவே நாம் எகிப்துக்கு உதவ பின்னிற்கப் போவதில்லை” என்று இளவரசர் பைசல் கூறியுள்ளார். பிரான்ஸ் சுற்றுப்ப யணத்தை முடித்து நாடுதிரும்பிய பின்னரே பைசல் இந்த அறிவிப்பை விடுத்தார்.
அவர் பிரான்ஸ் சுற்றுப்பய ணத்தில் அந்நாட்டு ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலன்டேவுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் ஹொலன்டே எகிப்து வன்முறைகளுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தார்.
எனினும் எகிப்தில் இஸ்லாமிய வாதிகள் ஒடுக்கப்படுவதற்கு மேற்கு நாடுகள் கண்டனம் வெளியிடுவதற்கு இளவரசர் பைசல் தனது அதிருப்தியை வெளியிட்டதோடு எகிப்து அரசு தீவிரவாதத்திற்கு எதிராகவே போராடி வருவதாகவும் கூறினார்.