Monday, October 28, 2013

2013 பஜ்ஜெட்டில் ஜனாதிபதியின் செலவு 742 கோடி. 2014 பஜ்ஜெட்டில் ஜனாதிபதியின் செலவு 856 கோடி

mahinda 2“ஆனால் தனி நபரான ஜனாதிபதிக்கு 852 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சீனி தொழிற்துறை அமைச்சருக்கு 9 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேற்படி நிதி ஒதுக்கீட்டு விடயம், கசினோ உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு எதிர்வரும் 7 ஆம் திகதி கொழும்பு கோட்டையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவது தொடர்பில் எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது.”

பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் 13 நாடுகளே கொழும்பு மாநாட்டில் பங்கேற்பதாக இதுவரை உறுதிப்படுத்தியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அந்த கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க,

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்காக செலவிடப்படும் தொகை இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை. மாநாடு தொடர்பான பிரசாரத்திற்காக மட்டும் 10 ஆயிரம் லட்சம் ரூபாவை அரசாங்கம் செலவிடுகிறது.

அத்துடன் மாநாட்டுக்கான கார்களை இறக்குமதி செய்ய 24 ஆயிரம் லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. தற்பொழுது கொழும்பு நகரம் ஒப்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக செய்யும் செலவுகளை பார்த்தால் மாநாட்டுக்கு பிறகு பொதுநலவாயம் என்ற பெயரில் வரி அறிமுகப்படுத்தப்படலாம்.

பொதுநலவாய நாடுகளின் மாநாடு இலங்கையில் நடத்தப்படுவதை ஐக்கிய தேசியக்கட்சி எதிர்க்கவில்லை.

பெரும் தொகை பணம் செலவிடப்படுவதும், செலவிடும் பணத்தை எப்படி திரும்ப பெறுவது என்ற தெளிவான வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இல்லாதது அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

அதேவேளை நாடாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத்திட்டம் தொடர்பான மதிப்பீட்டு வரைவில் தனிநபர் என்ற வகையில் ஜனாதிபதிக்காக மட்டும் 856 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் மாத்திரம் ஜனாதிபதிக்கான செலவுகள் 742 கோடி ரூபா. இதனடிப்படையில் அவரது செலவுக்காக 2014 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மேலதிமாக 114 கோடி ரூபா சேர்க்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பிரதமரின் செலவு இம்முறை இரண்டு கோடி ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் பிரதமருக்கு 32கோடி ரூபா ஒதுக்கப்பட்டது.

அத்தோடு பசில் ராஜபக்ஷவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 10 ஆயிரத்து 600 கோடிரூபாவும் கோத்தபாய ராஜபக்ஷவின் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு 25 ஆயிரத்து 390 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் உள்ள சில அமைச்சுகளுக்காக 36 ஆயிரத்து 250 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஜனாதிபதி உட்பட அவரது சகோதரர்களின் அமைச்சுகளுக்காக மட்டும் 72 ஆயிரத்து 400 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 14 அமைச்சுக்களுக்கான செலவுகளுக்காக வெறும்


ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தனி நபரான ஜனாதிபதிக்கு 852 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சீனி தொழிற்துறை அமைச்சருக்கு 9 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேற்படி நிதி ஒதுக்கீட்டு விடயம், கசினோ உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு எதிர்வரும் 7 ஆம் திகதி கொழும்பு கோட்டையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவது தொடர்பில் எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதற்கு முன்னர் ரணில்- கரு- சஜித் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது என்றார்.
Disqus Comments