Monday, October 28, 2013

வரலாறு காணாத வளர்ச்சி: 9.56 பில்லியன் டாலர் லாபம்!!! குதூகலத்தில் சம்சுங்!!!

சியோல்: சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இது வரை கண்டிராத அளவு 9.56 பில்லியன் டாலர் நிகர லாபத்தை நடப்பு காலாண்டில் ஈட்டியுள்ளது என கடந்த வெள்ளியன்று அறிவித்துள்ளது. இதற்கு காரணமாக விளங்கிய அதன் ஸ்மார்ட் போன்களின் விற்பனைக்கும் மைக்ரோ சிப்பின் அதிகப்படியான விலைக்கும் நன்றியை தெரிவித்துள்ளது.


 கைப்பேசி, தொலைகாட்சி மற்றும் மெமரி சிப்ஸ் தயாரிப்பில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக விளங்கும் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், இதன் சென்ற வருட நிகர லாபத்தை விட இந்த வருட லாபம் 26 சதவீதம் அதிகரித்துள்ளது என அந்நிறுவனம் தெரிவித்தது.


ஜூலை முதல் செப்டம்பர் வரை கணக்கிட்ட போது அதன் வருவாய் 13.2 சதவீதம் அதிகரித்து 59.59 பில்லியன் டாலராக இருப்பது தெரிய வந்துள்ளது. அதே போல் அதன் செயல்பாட்டு லாபம் 26 சதவீதம் அதிகரித்து 10.56 பில்லியன் டாலராக இருக்கிறது.

 பண்டிகை காலம் என்பதால் தன்னுடைய லாபம் அடுத்த காலாண்டில் மேலும் அதிகரிக்கும் என்று கிறிஸ்மஸ் விற்பனையை மனதில் வைத்து கொண்டு சாம்சங் நிறுவனம் தன்னுடைய லாப அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் போட்டியும் அதிகமாக இருக்கும், இத்தகைய போட்டியை எதிர்கொள்ள சில புதிய திட்டத்தை கையால உள்ளதாகவும் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Disqus Comments