Monday, October 28, 2013

கிரிக்கெட் வீரா்களின் காற்சட்டை ‘ஸிப்’களுக்கு 2015 முதல் தடை! - ICC

சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­க­ளின்­போது  வீரர்கள், வீராங்­க­னைகள் அணியும் ஆடை­களில் “ஸிப்” பொருத்­து­வ­தற்கு 2015 ஆம் ஆண்டு முதல் தடை விதிக்­கப்­படும் என ஐ.சி.சி. தெரி­வித்­துள்­ளது.

காற்­சட்­டை­களில் பொருத்­தப்­பட்­டுள்ள ஸிப்பை பயன்­ப­டுத்தி  போட்­டி­யா­ளர்கள் பந்தை சேதப்­ப­டுத்­து­வ­தாக தெரி­விக்­கப்­படும் முறைப்­பா­டு­களே இதற்குக் காரணம்.

டுபாயில் நடை­பெற்ற பாகிஸ்தான் அணி­யு­ட­னான இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டி­யின்­போது, தென்­னா­பி­ரிக்க வீரர் பப் டூ பிளேசிஸ், பந்தை சேதப்­ப­டுத்­திய குற்­றத்­துக்­காக போட்டி ஊதி­யத்தில் 50 சத­வீதம் அபராதம் விதிக்­கப்­பட்ட பின்­ன­ணியில் இத்­த­கவல் வெளி­யா­கி­யுள்­ளது.

இப்­போட்­டியின் 3 ஆவது நாள் ஆட்­டத்­தின்­போது, பப் டூ பிளேசிஸ், தனது காற்­சட்டை பொக்கெட் பகு­தி­யி­லுள்ள ஸிப்பில் பந்தை உராய்ந்­து­கொண்­டி­ருப்­பது அவ­தா­னிக்­கப்­பட்­டது. இதற்­காக அவ­ருக்கு ஐ.சி.சி. அப­ராதம் விதித்­தது.

இப்­போட்­டியின் பின்னர் தென்­னா­பி­ரிக்க அணியின் முகா­மை­யாளர் மொஹமட் மூஸாஜி கருத்­துத் தெரி­விக்­கையில், “சர்­வ­தேச போட்­டி­களில் வீரர்கள் அணியும் ஆடை­களில் ஸிப் பொருத்­து­வ­தற்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது என்­பதை எத்­தனை பேர் அறி­வா­ரகள் என்று எனக்குத் தெரி­ய­வில்லை.

 கிரிக்கெட் ஆடை­களில் குறிப்­பாக காற்­சட்­டையில் ஸிப் இருக்­கக்­கூ­டாது என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு ஒவ்­வொரு நாட்­டுக்கும் 2015 ஆம் ஆண்­டு­வரை அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது” என்றார்.

“தென்­னா­பி­ரிக்க கிரிக்கெட் சபையைப் பொறுத்­த­வரை நாம் இந்த காலக்­கெ­டுவின் இலக்கை அடை­வதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­துள்ளோம்” எனவும் அவர் கூறினார்.

பந்­து­வீச்­சா­ளர்கள் ரிவர்ஸ் ஸ்விங் பந்­து­வீச்­சுக்­காக ஸிப் மூலம் பந்தை உராய்வதாக ஐ.சி.சி. கூறுகிறது.

கிரிக்கெட் விதி 42.3 இன்படி செயற்கை பதார்த்தங்கள் எதையும் பயன்படுத்தி பந்தை பளபளபாக்குவது (பொலிஷ்) தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments