Monday, October 28, 2013

பில் கேட்ஸுக்கு இன்று 58வது பிறந்த தினம்

பில் கேட்ஸ் இன்று தனது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்.
பில் கேட்ஸ், மைக்ரோசொப்ட் நிறுவனர்களில் ஒருவர். அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் (CSA), முதன்மை செயல் அதிகாரியாகவும் (CEO) பணியாற்றுகிறார்.

போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்பட்ட இவர் உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து கடந்த 12 ஆண்டுகளாக முதல் இடத்திலுள்ளார்.

அமெரிக்காவின் சியாட்டில், வொஷிங்டன் நகரில் வில்லியம் ஹென்றி கேட்ஸ் (William Henry Gates or Bill Gates) 1955 ஒக்டோபர் 28 ஆம் திகதி பிறந்தார்.
கணிதத்திலும், அறிவியலிலும் சிறந்து விளங்கிய பில் கேட்ஸ் தனது முதல் கணினி நிரலை 'டிக்-டக்-டே' விளையாட்டுக்காக உருவாக்கினார், அது பயனாளர்களை கணினிக்கு எதிராக விளையாட வழி வகுத்தது. அவர் கணினியின்பால் பெரிதும் கவர்ந்து இழுக்கப்பட்டார். இவரது ஆர்வத்தை பார்த்த பாடசாலை நிர்வாகம் அதிக நேரம் கணினி பயிற்சியில் ஈடுபட அனுமதியளித்தது.

பாடசாலை கல்வியை முடித்து 1973ஆம் ஆண்டு ஹாவாட் பல்கலைக்கழகத்தில் இணைந்தார். பல்கலைக்கழக படிப்பை முடித்து தனது சிறு வயது வயது நண்பண் பால் ஆலங் என்பவருடன் இணைந்து மைக்ரோசொப்ட் நிறுவனத்தை 1975 ஆம் ஆண்டு ஆரம்பித்தார்.

கணிப்பொறி பிற்காலத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்கின்ற நம்பிக்கை அவருக்கும் அவருடைய நண்பருக்கும் இருந்தது, இதனால் அவர்கள் கணிப்பொறிக்கு தேவையான மென்பொருள்களை உருவாக்க ஆரம்பித்தனர்.

அவருடைய இந்த தொலை தூர நோக்கம் தான் இன்று அவரும் அவருடைய நிறுவனத்துக்கும் மிக பெரிய வெற்றியை தேடித்தந்துள்ளது.

இவருடைய தலைமையில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நோக்கமானது, நிறுவனத்தின் தொடர் வளர்ச்சியும், கணினி உபயோகிப்போருக்கு பூரண மன திருப்தியையும் ஏற்பட வேண்டும் என்பதே ஆகும்.

மைக்ரோசொப்ட் 1985 ஆம் ஆண்டு நவம்பர் 20, தனது மைக்ரோசொப்ட் விண்டோஸின் முதல் சில்லறை விற்பனை பதிப்பினை வெளியிடப்பட்டது. அதன் பின்னர் இன்று வரை நிறுவனத்தின் உற்பத்திகள் விற்பனையிலும், சேவையிலும் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments