Friday, October 4, 2013

மோசமான நாடுகளின் கடவுச்சீட்டுகளில் இலங்கை கடவுச்சீட்டும் உள்ளடக்கம்

வெளிநாடுகளுக்கு பயணிக்க விரும்புவோருக்கு உதவுவதில் மிக மோசமானதாக கருதப்படும் 10 நாட்டுகளின் கடவுச்சீட்டுகளில் இலங்கை கடவுச்சீட்டும் ஒன்றென வகைப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயண விதிகளின்போது ஆப்கானிஸ்த்தான், சோமாலியா, ஈரான், பாகிஸ்த்தான், எறிட்ரியா, பலஸ்தீனம், நேபால், சூடான், கொசொவோ மற்றும் லெபனான் ஆகிய நாட்டு மக்கள் எதிர்கொள்வது போன்ற வரையறைகளை இலங்கையர்கள் எதிர்கொள்வதாக 2013 ஹேன்லி அன்ட் பாட்னர்ஸ் விஸா வரையறைகள் அமைப்பு அறிவித்துள்ளது.

நாடுகளின் பிரஜைகள் வேறு நாடுகளுக்கு பயணிப்பதற்கான சுதந்திரத்தின் அடிப்படையில் இந்த அமைப்பு தயாரித்த சுட்டி 219 நாடுகளை வரிசைப் படுத்தியுள்ளது.

பின்லாந்து, சுவீடன், ஐக்கிய இராச்சியங்கள் என்பன 173புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பெற இலங்கை 32 புள்ளிகளை மட்டும் பெற்றுள்ளது.
தமது நாட்டுக்கு வருவோரை கட்டுப்படுத்துவதில் விஸா வரையறைகளை ஒரு பிரதான கருவியாக அரசாங்கங்கள் பயன்படுத்தி வருகின்றன.

விஸா தேவைகள் நாடுகளுக்கிடையே உறவின் தன்மையை புலப்படுத்துவனவாக உள்ளது.

துரதிஷ்ட வசமாக சர்வதேச சமுதாயத்தில் இலங்கை பற்றிய கணிப்பு உயர்நிலையில் இல்லை என்பதை இது காட்டுகிறது.
Disqus Comments