புத்தளம், சென். அன்றூஸ் கல்லூரி வாக்களிப்பு நிலையத்திலிருந்து கடந்த 24
ஆம் திகதி மீட்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதிகள் இரண்டையும் இன்று
4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவிழ்த்து எண்ணுமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு
புத்தளம் நீதவான் ரங்க திஸாநாயக்க நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
அந்த பொதியில் கைச்சாத்திட்ட வேட்பாளர்கள் 12 பேரையும் மற்றும் புத்தளம் பொலிஸ் விசாரணை பிரிவின் அதிகாரிகளையும் நீதிமன்றத்தில் அச்சந்தர்ப்பத்தில் பிரசன்னமாய் இருக்குமாறு நீதிமன்ற பதிவாளர் ஊடாக நீதவான் அவர்களுக்கு அறிவித்தார்.
மீட்கப்பட்ட வாக்குச்சீட்டுட்டுகள் தொடர்பில் இரகசிய பொலிஸாரும் தேரதல்கள் ஆணையாளரும் தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.