Tuesday, October 22, 2013

அம்பாறையில் சிறுவயது திருமணங்கள் அதிகரிப்பு: ராவணா சக்தி குற்றச் சாட்டு

காணிகளை பெறுவதற்காக அம்பாறை மாவட்டத்தில் சிறுவயது திருமணங்கள் நடைபெறுவதாக 'ராவண சக்தி' இயக்கம் நேற்று திங்கட்கிழமை கூறியது.

றம்புக்கன் ஓயா திட்டத்தின் கீழ் காணி வழங்குதலில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே இந்த திருமணங்கள் இடம்பெறுவதாகவும் அந்த இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

'றம்புக்கன் ஒயா திட்டத்தில் விவசாய நோக்கத்திற்காக அரை ஏக்கர் காணிமட்டுமே ஒருவருக்கு வழங்கப்பட்டது' என ராவண சக்தியின் செயலாளர் இத்தகந்த சத்ததிஸ்ஸ கூறினார்.

இப்பிரச்சினை தொடர்பாக ஒரு மகஜரை கையளிப்பதற்காக சத்ததிஸ்ஸ நீர்ப்பாசன அமைச்சுக்கு பல கிராம வாசிகளையும் அழைத்துக்கொண்டு நேற்று திங்கட்கிழமை வந்திருந்தார்.

நிலப்பற்றாக்குறை காரணமாக மகாஓயா பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 17 கிராமங்களைச் சேர்ந்த 1100 குடும்பங்கள் கஷ்டப்படுகின்ற அதேசமயம் அமைச்சர்களுக்கும் அமைச்சர்களின் மனைவிமாருக்கும் 100 ஏக்கர் வீதம் காணி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல நூற்றாண்டுகளாக இந்த கிராமவாசிகளுக்கு சொந்தமாகவிருந்த காணிகனை இவர்களுக்கே நியாயமாக பகிர்ந்தளிக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.

இதேவேளை, இந்த காணிகளை பெறுவதற்காக அம்பாறை மாவட்டத்தில் சிறு வயது திருமணங்கள் அதிகரித்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
Disqus Comments