Saturday, November 9, 2013

இலங்கையின் தினமும் 1200 குழந்தைள் பிறக்கின்றன, 1000 பேர் மரணமடைகின்றனர்

இலங்கையில் நாளொன்றுக்கு 1200 குழந்தைகள் பிறக்;கின்றனர். இத்தகவலை சுகாதார அமைச்சர் மகித்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் தகவலின்படி, இலங்கையின் சனத்தொகை நாளொன்றுக்கு 200ஆல் அதிகரிகின்றது. ஒவ்வொரு 24 மணித்தியாலும் 1200 குழந்தகைள் பிறக்கின்றனர். அத்துடன், நாளொன்றுக்கு 1000 பேர் மரணமடைகின்றனர்.

நாளொன்றுக்கு இறப்பர்களின் எண்ணிக்கையில் 60 வீதமானோர் புற்றுநோய், மாரடைப்பு போன்ற தொற்றா நோய்களினால் மரணமடைகின்றனர். தினமும் இறப்பவர்களில் தொற்றா நோய்யான புற்றுநோயினால் இறப்பர்களின் சாராசரி 70 வீதமாகவுள்ளது.

இதுதவிர, 35 வயதிற்கும் 40 வயதிற்குமிடைப்பட்டவர்கள்  மாரடைப்புக்குள்ளாகி உயிர்துறைப்பதாகவும் இவர்களில் பெரும்பாலானோர் புகைப் பிடித்தலுக்கு அடிமையானவர்களுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மது பாவனை மற்றும் புகைப்பிடித்தல் என்பன உடல் நலத்துக்கு உகந்ததல்ல என்று தெரிந்தும் கூட அப்பழங்கங்களுக்கு அடிமைப்பட்டதனால் அவர்களால் அவற்றிலிருந்து விடுதலை பெற முடியாதவர்ளாகவுள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

தோற்றா நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக அதிகளவிலான பணத்தை அரசாங்கம் செலவு செய்யவதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் மகித்திரிபால சிறிசேன, ஒரு புற்று நோயாளியை நோயிலிருந்து குணப்படுத்துவதற்காக 10 முதல் 15 மில்லியன் ரூபாவை அரசாங்கம்
செலவிடுவதாகவும் மேலும் சுட்டடிகாட்டுகிறார்.
Disqus Comments